திருவாரூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்த திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளார் பாரத நேரு அவர்களை அனைத்துதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க தமிழக காவல்துறையினர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 48 மணி நேரம் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின் போது பைக்கில் வந்த கொள்ளையன் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடினார். 2 மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, ‘பார் கோடு’ மூலம் தெரியவந்துள்ளது.
திருச்சி நகைகடை கொள்ளை வழக்கில் பிடிப்பட்ட மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிபடை காவல்துறையினர், இன்று அதிகாலை சுரேஷ் உறவினர்கள் ஐந்துபேரை பிடித்து திருவாரூர் ஆயுத படை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்:மேலும் தப்பி ஓடிய சுரேஷ் நண்பர்கள்இஉறவினர்கள்இசுரேஷ் மீது என்னன்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது குடியுரிமை நிருபர்
S. வீரமணி
குடியுரிமை நிருபர்