வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் லத்தேரி காவல் நிலைய போலீசார் லத்தேரி பண மடங்கி கூட்ரோடு சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது TN 09 AR 0500 என்ற பதிவு எண் கொண்ட காரில் குற்றவாளிகள் சுமார் 375 கிலோ எடை உடைய 12 செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றனர். அதனை தடுத்து காரையும் செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு விசாரணைக்கு பிறகு திருமதி.அருணா, வனக்காப்பாளர் திரு.தணிகைவேல் மற்றும் திரு.மணி, அவர்களிடம் 12 செம்மரக்கட்டைகளையும் ஒப்படைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்