சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த மோகன் குமார் (21), என்பவர் சர்க்கரை வியாபாரம் செய்து வருகிறார், தனது தொழில் சம்பந்தமாக அவரது செல்போனுக்கு 976XXXX122 என்ற whatsapp எண்ணில் இருந்து மகாலட்சுமி சுகர் புரோக்கர் என்ற தரகு நிறுவனத்திடம் சேட் செய்ததில் அவர் கூறியதை நம்பி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிரண் என்டர்பிரைஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கௌரவ் என்பவருக்கு 30 டன் சர்க்கரை பெற வங்கி மூலம் ஒன்பது லட்சத்து 38,175 ரூபாய் அனுப்பிய பின் குற்றவாளி சர்க்கரையை அனுப்பாமலும் பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றியதாக புகார் மனு சமர்ப்பித்திருந்தார்.
மேற்படி புகார் மனு தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபினவ் அவர்களின் உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்லப்பாண்டியன் அவர்களின் மேற்பார்வையில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.கைலாசம் அவர்கள், வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுத்ததன் பேரில் குற்றவாளியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு 5 லட்சம் மீட்கப்பட்டது மேலும் இதுபோன்ற போலியான இனிய வர்த்தகர்கள் இணையதள செயலைகள் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக வரும் போலி விபரங்களை நம்பி ஏமாற வேண்டாம். மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதையோ, லோன் தருவதாகவும் செல்போனுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை நம்பி தங்களின் வங்கி விபரம் மற்றும் otpகளையும் யாரிடமும் பகிர வேண்டாம் இணைய மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப் லைன் நம்பர் 1930 என்ற இணையதளத்தில் உடனே புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்டு தர இயலும் எனவும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்