மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்கள் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மொபைல் போன் தொலைந்து போனதாக பதியப்பட்ட புகார்களில் கடந்த ஒரு மாதத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் ரூபாய் ஏழு லட்சத்து 24 ஆயிரம் மட்டும் மதிப்புள்ள 50 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவப்பிரசாத் ஐ.பி.எஸ், அவர்களால் (20.01.2023), ம் தேதி உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை 1,36,59,850/-₹ (ரூபாய் ஒரு கோடியே முப்பதாறு லட்சத்து ஐம்பத்தொன்பது ஆயிரத்து என்னூற்றி ஐம்பது மட்டும்) மதிப்புள்ள 977 மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும் வங்கிக் கணக்கு எண் cvv மற்றும் otp போன்ற விவரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மேலும் பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் இன்வெஸ்ட்மென்ட் ஆப்புகளை நம்பியும் ஆன்லைன் வேலை வாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், மற்றும் குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் லோன் ஆப்களிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால் அட்டென்ட் செய்ய வேண்டாம் என்றும் வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம், ரிமோட் அக்சஸ் app களான Anydesk,teamviewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்க்கும், http://www.cybercrime. gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
திரு.விஜயராஜ்