திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் ஆவடி காவல்துறை ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், உத்திரவின்பேரில் அரசு தடை செய்யப்பட்ட பான் குட்கா மற்றும் கஞ்சா கடத்துப்பவர்களை பிடிக்க மீஞ்சூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் முனியசாமி, தலைமையில் மீஞ்சூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் இருந்தபோது பையை மாட்டிக் கொண்டு வேகமாக சென்ற வாலிபரை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அவன் வைத்திருந்த பேக்கில் 4. கிலோ 600 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது.
மீஞ்சூர் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரித்த போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெயசூர்யா (21), என்பதும் மேலும் இவர் தாம்பரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் எனப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்ட ஜெயசூர்யா மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு