கோவை : தமிழக காவல்துறையில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராகவும், காவல் ஆய்வாளராகவும், காவல் உதவி ஆய்வாளர்களாகவும், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும், பணிபுரிந்து வரும் 3500 பேர் இணைந்து காக்கும் கரங்கள் 1993 என்ற பெயரில் whatsapp குழுவை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து பல்வேறு காரணங்களால் இறந்து போன நண்பர்களின் குடும்பத்தினருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சிரமப்படும் நண்பர்களின் குடும்பத்தினருக்கும், பண உதவி செய்து வருகின்றனர் அதன்படி 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் இந்த குழுவில் இருந்து இறந்து போன 64 நண்பர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய். 3,70,11,705/- மருத்துவ சிகிச்சைக்காக நாலு நண்பர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய். 11,78,200/- என மொத்தம் ரூபாய். 3,81,89,905/- என பங்களிப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களில் இந்த குழுவில் இருந்து இறந்து போன கோவை மாநகரை சேர்ந்த ஜம்புலிங்கம், கடலூரை சேர்ந்த ஆறுமுகம், மதுரையை சேர்ந்த பெருமாள், சேலம் மாநகரை சேர்ந்த மாதையன், திருச்சி மாநகரை சேர்ந்த ஐயப்பன், வேலன் வந்திய தேவன், தேனி மாவட்டத்தை சேர்ந்த சுதாக,ர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பீட்டர் லாரன்ஸ், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆசைத்தம்பி, ஆகிய 9 நண்பர்களின் குடும்பத்தினருக்கு பங்களிப்பு வழங்க வேண்டி இந்த குழுவில் உள்ள நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ₹ 64,02,500/- பங்களிப்பு பெறப்பட்டு ஒன்பது நண்பர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹ 7,22,500/- வழங்கியுள்ளனர் அதன்படி இன்று இதற்கான காசோலையை கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள், கோவை மாநகரை சேர்ந்த ஜம்புலிங்கம் குடும்பத்தினருக்கு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் காக்கும் கரங்கள் 1993 கோவில் சேர்ந்த நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்