கோவை: பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் வலியுறுத்தும் வகையில் ஹலஞ்சம் இல்லாத இந்தியா, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி ஊழியர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் நடைபெற்றது.
இதில் ” லஞ்சம் வாங்காதே, லஞ்சம் வாங்கியவர்கள் நிம்மதியாக உறங்கியது இல்லை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாநகராட்சி ஊழியர்கள் பேரணியில் கலந்துக்கொண்டனர்.
இந்த பேரணியானது கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இதனை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் ஊழலில்லா நிர்வாகத்தை தர வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் பொழுது மாநகராட்சி துணை ஆணையர் மதுராந்தகி ஆகியோர் உடனிருந்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்