சேலம்: சேலம் சூரமங்கலம் அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் ஆத்தூர் அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் கூறப்பட்டன.
வெங்கடேசனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் பிடியில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.