சேலம்: ஆத்தூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய மனைவி பெயரில் 37 செட் நிலம் பதிவு செய்வதற்காக மதிப்பீடு செய்து தருமாறு முத்திரைத்தாள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
மனுவை பரிசீலித்த வட்டாட்சியர் அலுவலக வருவாய் ஆய்வாளர் நிலத்தை மதிப்பீடு செய்ய 40 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் எனும் அது கொடுத்தால் மட்டுமே அதற்கான சான்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால் பல மாதங்களாக இந்த மனு நிலுவையில் உள்ளது லஞ்சப் பணத்தை கொடுக்க மனமில்லாத விவசாயி இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் ஆலோசனைப்படி இன்று லஞ்சப் பணமாக 35 ஆயிரம் ரூபாயை விவசாயி சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்க முயன்றபோது அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட செந்தில்குமாரிடம்தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் லஞ்சப்பணம் யாருக்காக பெறப்பட்டது அந்த பணம் யார்யாருக்கு வழங்கப்படும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.