பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி திருமதி .ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் நேற்று மாலை 4 மணியளவில் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள், இடைத்தரர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.67 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.