சென்னை: நேற்று சென்னை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 29 மாவட்டங்களில் உள்ள 38 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரின் சோதனையில் கணக்கில் வராத பணம் ₹26.99 லட்சம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ₹2.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் தொகை ஏதும் கைப்பற்றப்பட வில்லை.
தர்மபுரி மாவட்டம் அரூர் நகர ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட 8 அலுவலகங்களில் மட்டும் நேற்று தொடங்கிய சோதனை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.