இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ள இராமேஸ்வரம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி வணிக ஆய்வாளர் கைது. உதவி பொறியாளர் சோதனையை கண்டு தப்பி ஒடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்று தொண்டி, திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் லஞ்சம் பெறும் அனைத்து துறை அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு ஏழை, எளிய மக்களின் ரத்தத்தை உறுஞ்சும் லஞ்ச பெருச்சாலிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி