மதுரை : உலக பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவர்கள் சங்கம் சார்பாக கண் பாதுகாப்பை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்சியில் அரவிந்த் கண் பாதுகாப்பு மையத்தின் தலைவர் Dr.R.D. ரவீந்திரன் மதுரை கண் மருத்துவர்கள் சங்கத் தலைவர் Dr. சிரிஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். Dr. கிருஷ்ணதாஸ், Dr. பிரஜ்னா அவர்களும் அரவிந்த் கண் மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றம் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்பேரணி மதுரை ரயில்வே ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனையில் முடிவடைந்தது.100 பொதுமக்களுக்கு மதுரை கண் மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து விபத்துக்குள்ளாகி தலையில் அடிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலையில் அடிபடும் பெரும்பாலானோருக்கு பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு அதனால் படிப்படியாகப் பார்வையிழப்பு ஏற்படுகிறது. பார்வையைப் பாதுகாக்கவும் உயிரைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அதிகாரி திரு.S.G. ராமாநாதன், திரு. டாமின், திரு. சரவணன் மற்றும் திரு. முருகராஜ் ஆகியோர் இந்நிகழ்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை