திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் நெடுஞ்சாலை ரோந்து பணி வாகனங்கள் (ரோந்து1-கானூர் சோதனை சாவடி -கோவில்வெண்ணி, ரோந்து 2-திருவாரூர்-கீரனூர் சோதனை சாவடி, ரோந்து 3-வடுவூர் ஏரிக்கரை சோதனை சாவடி -திருவாரூர் விளமல், ரோந்து 4-பாமணி சோதனை சாவடி-தம்பிக்கோட்டை கீழக்காடு சோதனை சாவடி) மற்றும் வாகனங்களில் உள்ள தளவாட பொருட்களை (25.10.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது, நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் வாகனங்களில் உள்ள தளவாட பொருட்களை ஆய்வு செய்து, நெடுஞ்சாலை ரோந்து பணி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பணியின் போது கையாள வேண்டிய முறைகள் குறித்தும், சந்தேகத்திற்குரிய நபர்களின் வாகனங்களை ஆய்வு செய்தும், நெடுஞ்சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுவது குறித்தும், நெடுஞ்சாலை ரோந்து பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும், தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பது மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவது குறித்தும், தற்பொழுது மழை காலம் என்பதால் இரவு நேர ரோந்து பணியின் போது கூடுதல் கவனத்துடன் கண்காணித்து விரைந்து செயல்பட வேண்டும் என்றும் நெடுஞ்சாலை ரோந்து பணி அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.