பெரம்பலூர்: தமிழகத்திலேயே தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட பெரம்பலூரில் தற்போது கடந்த சில தினங்களாக 146, 160,180 பேர் என மூன்று இலக்க எண்களில் தொற்று பதிவாகி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முழு ஊரடங்கில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் ஒரு சில வணிக நிறுவனங்கள் செயல்படுவதாக தெரியவந்ததையடுத்தும்,பொதுமக்கள் பலர் அலட்சியமாக வீட்டை விட்டு அவசியமின்றியும் வெளியே வருவதை தடுக்கும் நோக்கிலும், பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் முழு ஊரடங்கை கண்காணிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விதியை மீறும் வணிகநிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள் என துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.
.இன்று காலை முதலே கண்காணிப்பு குழுவினர் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர்.இதில் ஒலி பெருக்கிகள் மூலம் ஊரடங்கை முறையாக கடைபிடித்து ஒத்துழைப்பு தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.இதனை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.