இராணிப்பேட்டை : கடந்த 28.11.2019 ம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை இராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நிர்வாக காரணங்களுக்காக துவங்கப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காகவும் குற்றங்கள் நடவா வண்ணம் தடுப்பதற்காகவும் கடந்த 15.01.2020 ஆம் தேதி பிரத்யேக ரோந்து அமைப்பு (Dedicated Beat System) காவல்துறை தலைவர் வடக்கு மண்டலம் திரு நாகராஜன் இ.கா.ப., அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 108 ரோந்து அதிகாரிகள் (Beat Officers) நியமிக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணி செய்து வருகின்றனர்.
பிரத்யேக ரோந்து அமைப்பு பொதுமக்களிடம் நன்வரவேற்பைப் பெற்றதன் காரணமாக இதனை மேம்படுத்தவும் திறம்பட செயல்படும் இன்று 26.06.2020 ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் ரோந்து கண்காணிப்பு அமைப்பு (Beat Monitoring System- BMS) என்ற செயலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்களால் துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இராணிப்பேட்டை உட்கோட்டம் செல்வி. KT பூரணி மற்றும் திரு.மனோகரன் அரக்கோணம் உட்கோட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இசெயலி தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் தெரிவிக்கையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ரோந்து செல்லும் காவல் ஆளினர்களுக்கு இச்செயலி பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இச்செயலில் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள் வாரியாக உள்ள மொத்தம் 1150 ரோந்து தணிக்கை புத்தகங்கள் (பட்டா புத்தகம்) இருக்கும் இடத்தில் Latitude,Longitude பெறப்பட்டு, அந்த Latitude,Longitude பயன்படுத்தி QR Code தயார் செய்து, பட்டா புத்தகங்களில் QR Code ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு ரோந்து காவலர் தினமும் ரோந்து செல்லும் போது அந்த QR Code தனது செல்போனில் உள்ள BMS செயலி மூலம் ஸ்கேன் செய்து அப்லோட் செய்யும் போதும் அந்த சட்ட புத்தகத்தை தணிக்கை செய்யப்பட்ட நாள், நேரம்,தணிக்கை செய்யப்பட்ட புத்தகம் வைக்கப்பட்ட இடத்தின் பெயர்,தணிக்கை செய்த காவலரின் பெயர் ஆகிய விவரங்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் பதிவேற்றம் ஆகும்.
இதன்மூலம் காவலர்களின் சீரான ரோந்து பணியை அதிகாரிகள் இருக்கின்ற இடத்திலேயே கண்காணிக்க இயலும் மற்றும் பொதுமக்களிடத்தில் காவல் துறையின் செயல்பாடுகள் அதிகரித்து நன்மதிப்பை பெறவும் குற்றங்கள் குறையும் ஏதுவாக இருக்கும் மேலும் பாரம்பரியமிக்க தமிழ்நாடு காவல் துறையின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் தற்காலத்திற் கேற்றார்போல் மெருகூட்டி சீர்தூக்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்