கோவை : கோவை மாவட்டத்தில் இன்று 23.07.2020, 12.45 மணியளவில் தொண்டமுத்தூர் காவல் நிலைய சரகம் சுண்ட பாளையம் – தாளியூர் ரோடு, உளியம்பாளையம் விழி இழந்தோர் பள்ளி அருகே ரோட்டின் இடது புறம் 35 ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள்(மொத்தம் ரூ.17,500) கீழே கிடந்ததை அவ்வழியாக சென்ற கோவை வன சரகம், கெம்பனூர் சுற்று வனக் காவலர் செல்வ ராஜன் கண்டெடுத்து அவற்றை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார். இவரது நேர்மையினை காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு இ.கா.ப. அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார். பணத்தை தொலைத்தவர்கள் உரிய அடையாளம் முகாந்திரம் கூறி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்