தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி, வேதாநகர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் மைக்கேல் இருதயசெல்வன் 45. என்பவர் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொம்மடிக்கோட்டை விசுவாசபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார்.
மேற்படி மைக்கல் இருதய செல்வனுடன் கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த துரைப்பழம் மகன் தங்கராஜ் 55. என்பவரும் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மேற்படி தங்கராஜ், மைக்கேல் இருதயசெல்வனின் பையிலிருந்த பணத்தை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இதுகுறித்து மைக்கேல் இருதயசெல்வன் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. நெல்சன் வழக்குபதிவு செய்து மேற்படி குற்றவாளி தங்கராஜை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரொக்க பணம் ரூபாய் 14,000/-த்தையும் பறிமுதல் செய்தார்.