பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சந்திரசேகர் என்பவர் தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு.அலாவுதின் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.விவேகானந்தன் ஆகியோர் மேற்படி லாடபுரம் கிராமத்திற்கு சோதனையிட்டதில் சட்ட விரோதமாக 1240 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்தார். மேற்படி நபரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த அரிசியை பறிமுதல் செய்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை