கோவை: கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் உத்தரவின் பேரில்பெருமாள் கோவில் வீதியில் உள்ள ரேஷன் கடையில் திடீர் ஆய்வு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்டவற்றின் இருப்பு மிகக்குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடை விற்பனையாளர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர். இதில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை அவர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார், ரேஷன் கடை விற்பனையாளர் பாலமுருகனை கைது செய்தனர்.