விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.ரேகாமதி, தலைமையிலான போலீசார் ஓமந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரேஷன் அரிசி ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.