திருநெல்வேலி : தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கும் நோக்கத்துடன் மற்றும் கடத்தி விற்கும் கள்ள சந்தை காரர்களை கண்காணித்து, கைது செய்ய DGP உயர்திரு. டாக்டர்.பிரதீப் பிரதீப் வி பிலிப், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, அவர்களால் குற்றவாளிகளை தெரிந்து கொள்ளுதல் (Know your criminals) என்று வகைப்படுத்தப்பட்ட கள்ளச்சந்தை குற்றவாளிகள் ரேஷன் பொருட்களை கடத்துவதை தடுப்பதற்காக மாவட்ட எல்லை மற்றும் மாநில காவல் சோதனைச் சாவடி சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் வாகன தணிக்கை செய்து ரயில் நிலையங்களில் திடீரென தணிக்கை செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 30 .11. 2019 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம் புளியரை காவல் சோதனைசாவடியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 13500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளும், சுமார் 1725 கிலோ வெளி மார்க்கெட் அரிசி மூட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி லாரி ஓட்டுநர் ராமசாமி வயது 49 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
ராமசாமி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி, இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆலங்குளத்தை சேர்ந்த ரைஸ்மில் நடத்திவரும் மாரியப்பன் என்பவர் தலைமறைவானார். வழக்கின் முக்கிய குற்றவாளியான மாரியப்பன் மீது ஏற்கனவே 6 கள்ளச்சந்தை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் மாரியப்பன் கள்ளச்சந்தை தடுப்பு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஷன் அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்க கடத்துவதற்கு வதை தடுப்பதற்காக மாரியப்பனை கடந்த 18. 9. 2019 ஆம் தேதி தென்காசி உட்கோட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தி ஆறு மாத காலம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி வழக்கின் முக்கிய குற்றவாளியான மாரியப்பனை கைது செய்ய, உயர்திரு. டாக்டர்.பிரதீப் பிரதீப் வி பிலிப் காவல் துறை இயக்குனர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அவர்களின் உத்தரவின் படி, திரு ஸ்டாலின் காவல் கண்காணிப்பாளர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மாவட்டம் அவர்களின் அறிவுரையின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படியும் திரு. இளங்கோவன் மாவட்ட துணை கண்காணிப்பாளர் குடியுரிமை வழங்க குற்றப்புலனாய்வுத்துறை மதுரை உட்கோட்டம் அவர்களின் மேற்பார்வையில், திருநெல்வேலி காவல் ஆய்வாளர் திரு.சிவ சுப்பு தலைமையில், சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளுநர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் தீவிர வேட்டையில் மாரியப்பன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று (15 .12. 2019) தேதி மாரியப்பன் கைது செய்யப்பட்டார்.