கிருஷ்ணகிரி : சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று ஓசூர் ரெயில் நிலைய வளாகத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். சேலம் கோட்ட வெடிகுண்டு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், ஓசூர் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் பயணிகளின் உடமைகள் மற்றும் ரெயில் நிலைய வளாகத்தில் நின்ற வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், ரெயிலில் இருந்து இறங்கி வந்த நபர்களையும் தரவாக சோதனை செய்தனர். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்