மதுரை: ரோடு கான்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறி ரூ5 லட்சம் மோசடி பெண் உள்பட 4 பேரிடம் போலீஸ் விசாரணை. மதுரை மார்ச் 18ரோடு காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக கூறி ரூபாய் 5 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை செல்லூர் இருதயபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் செந்தில்குமார். இவரிடம் பிரபாகரன் என்ற முகில் பிரபாகரன் ரோடு காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய செந்தில்குமார், பிரபாகரன் , சேலம்குஞ்சம் பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி ,மைசூரைச் சேர்ந்தபிச்சைமுத்து, மற்றும் பெண் ஒருவர் கார்த்தியாயினி ஆகியோரிடம்2019ம்ஆண்டு ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார். அவர்கள் பணம் பெற்றுக்கொண்ட பிறகு சொன்னபடி காண்ட்ராக்ட் எடுத்து தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி