சென்னை : சிறப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளதன்பேரில், தெற்கு கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப., அவர்கள் அறிவுரையின்பேரில், தெற்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப., மற்றும் புனித தோமையர்மலை துணை ஆணையாளர் முனைவர் கே.பிரபாகர் ஆலோசனையின்பேரில், புனித தோமையர்மலை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ராஜலஷ்மி, உதவி ஆய்வாளர் திரு. ஜெயராம் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் இன்று (28.10.2020) அதிகாலை சுமார் 03.00 மணியளவில் ஆலந்தூர், ஆசர்கானா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, TN 18 AS 5236 என்ற பதிவெண் கொண்ட TATA Eicher சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 1.மகேஷ், வ/29, செங்குன்றம், 2.முரளி, வ/30, புழல், 3.மகுடீஸ்வரன், வ/35, திண்டுக்கல் மாவட்டம், 4.முத்து கிருஷ்ணன், வ/36, செங்குன்றம், ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 330 கிலோ கஞ்சா, பணம் ரூ.2,80,000/-, 4 செல்போன்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை கைப்பற்றுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மேற்படி கஞ்சாவை ஆந்திராவிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பொருட்கள் ஆகியவை S-1 புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததின்பேரில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதில், சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 28.10.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்