திருச்சி : திருச்சி மாநகரில், (30.08.22),-தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலைய எல்லையில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ், சைனி, விமல், கணேஷ், கூல்லிப், RMD பவுடர் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காமட்சியம்மன் கோயில் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இடத்தை சோதனை செய்தபோது அங்கு சந்தேகம்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த உறையூர், காவல்கார தெருவை சேர்ந்த கோபி மற்றும் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த செந்தில் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து ரூ.7,00,000/- இலட்சம் மதிப்புள்ள சுமார் 483 கிலோ 600 கிராம் பறிமுதல் செய்தனர்.
விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். திருச்சி மாநகரத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்றவைகளால் இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.