திருச்சி: புகார்தாரர் சார்லஸ், கிளை மேலாளர் Hitachi Case Management Service Pvt Ltd விஸ்வாஸ் நகர், திருச்சி என்பவர் மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களிடம் கொடுத்த புகாரில் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 3 பணியாளர்கள் பணம் ரூ.70,77,600/- ATM-ல் நிரப்பாமல் பணத்தை கையாடல் செய்துள்ளதாக கொடுத்த புகாரின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்பேரில், மாநகர குற்றப்பிரிவு (CCB) குற்ற எண்.14/2024 u/s 406,417, 420, 120(b) IPC – ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் விசாரணையில், Hitachi Case Management Service Pvt நிறுவனத்தில் பணிபுரியும் 1.சக்திவேல், 2.பூவேலன். 3.கோவிந்தராஜ் ஆகியோர்கள் Hitachi Case Management Service PVt Ltd நிறுவனத்தின் மூலம் வங்கி ATM-களில் பணம் நிரப்பும் Operator-ஆக பணிபுரிந்துக்கொண்டு ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை முழுவதும் நிரப்பாமல் அதில் 8 ATM-களில் நிரப்பட வேண்டிய தொகை ரூ.70,77,600/- கையாடல் செய்து, ATM-ல் முழுத்தொகையையும் நிரப்பி விட்டதாக அறிக்கை சமர்ப்பித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணையில் மேற்கண்ட நிறுவனத்தில் பணிபுரிந்த சந்தேக நபர்களான 1.சக்திவேல் 2.பூவேலன் 3.கோவிந்தராஜ் ஆகியோர்களிடம் விசாரணை செய்து, மேற்கண்ட தொகை ரூ.70,77,600/- கையாடல் செய்திருப்பதை உறுதி செய்தனர்.
குற்றவாளி-1 சக்திவேல் என்பவர் ரூ.70,77,600/-த்தை கையாடல் செய்வதற்கு உடந்தையாக இருந்த 2வது குற்றவாளி பூவேலன் என்பவர் ரூ.3,00,000/-மும் 3வது குற்றவாளி கோவிந்தராஜ் என்பவர் ரூ.2,00,000/- பெற்று சுய இலாபம் அடைந்ததாகவும் ஓப்புக்கொண்டவர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுரையின் பேரில் குற்றவாளிகள் மூவரையும் 05.05.2024-ந்தேதி மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து வழக்கு சொத்தாக ரூ.2,00,000/-மும் பணம், வங்கி இருப்பாக ரூ.2,00,000/-மும் மற்றும் ஒரு Android Cell Phone கைப்பற்றி, சிறையில் அடைத்தனர்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.