கோவை: கோவையில் உள்ள எஸ். எம். இந்தியா கம்பெனியில் இருந்து பேசுவதாகவும் தங்களுக்கு 12 டன் பொன்னி அரிசி தேவை என்றும் அதை அனுப்பி வைக்குமாறும் தொலைபேசியில் ஒரு ஆசாமி தெரிவித்தார்.
இதை நம்பிய சாந்தி 12 டன் பொன்னி அரிசியை அந்த நிறுவனத்தின் மேலாளர் ரஞ்சித் மூலமாக லாரியில் சூலூர பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரில் சந்திப்பில்கொண்டு கொடுத்தார்.
அந்த ஆசாமிகள்நாளை பணம் தருவதாக கூறினார்கள். இதனால் அந்த மேனேஜர் ரஞ்சித்அரிசியை கொடுக்காமல் லாரியை நிறுத்திவிட்டு.மறுநாள் சென்று பார்த்தபோது .
லாரியில் இருந்த 12டன் அரிசி திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சாந்தி சூலூர்காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜான் ரோஸ் வழக்குப்பதிவு செய்து செல்வபுரம் கல்லாமேடு சேர்ந்த மன்சூர் கான் 27 ,போத்தனூர் நூராபாத்தைசேர்ந்த சலீம் 42 உக்கடம் அன்பு நகரை சேர்ந்த அப்பாஸ் 43 ஆகியோரை நேற்று கைது செய்தார்.