நாமக்கல்: நேற்று நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில்
தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து தரவேண்டி புகார்கள் பெறப்பட்டதில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்லபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 09.09.2021-ஆம் தேதி 301 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொலைந்துபோன சுமார் 32 இலட்சம் மதிப்புள்ள செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைகாகப்பட்டது.
06.10.2021-ஆம் தேதி வரை 80 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 42 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் வழியாக இரகசிய பிற மாவட்டங்களுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவது குறித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாபாளர் சுரேஷ் நாமக்கல் உட்கோட்ட காவல் காவல் ஆய்வாளர் திரு.குமரவேல் பாண்டியன், எருமப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் .திரு.பூபதி
ஆகியோர்கள் கொண்ட தனிப்படை திருச்செங்கோடு -நாமக்கல் செல்லும் சாலையில் TN 65 AL 3458 என்ற எண் கொண்ட லாரியின் ஓட்டுநர் ,
திருச்சி மாவட்டம் தொட்டியம், அருகில் உன்னியூர் தண்டபாணி மகன்
தமிழ்வாணன் 38, அடுத்து 38,TN 36 AK 1289 என்ற எண் கொண்ட லாரியின் ஓட்டுநர்
திருவண்ணாமலை தண்டராம்பட்டு வானாபுரம் சுரேஷ் என்பவரும், என்பவரும்
ரூ.58 இலட்சம் மதிப்புள்ள 3050 கிலோ குட்கா பொருட்களை மரத்தூள் மற்றும் தவிடு போல ஏற்றிச்செல்வது உள்ளே சட்டவிரோதமாக கடத்தி கடத்தி வந்தவர்களை 2 பேர்களை கைது செய்துள்ளனர்.
இவைகளையும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரஜ்குமார்தாகூர் பார்வையிட்டார் இவைகள் குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.