திருச்சி : திருச்சி மாநகரில் கடந்த (20.11.2022)-ந்தேதி, திருச்சி சஞ்சீவிநகர் சந்திப்பில், இளையதலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Vimal Pan Masala, Hans, Cool LIPஆகியவற்றை விற்பனை செய்தவதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் 50 மூட்டைகளில் சுமார் ரூ.55,00,000/- மதிப்புள்ள 1070 கிலோ குட்கா போதை பொருட்களை வெங்காய மூட்டைகளுக்கிடையே வைத்து பதுக்கி கடத்தி வந்த, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சீனா (எ) சீனிவாசன் மற்றும் சேகர் ஆகியோர்களை கைது செய்து, வழக்குப்பதிவு செய்தும், நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் தொடர்ந்து குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.