கோவை: கோவை ஏப்12 விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பக்கம் உள்ள பணக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவைப்புதூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஜலாபுதீன் என்பவர்12 டன் சின்னவெங்காயம் அனுப்புமாறும் ,அதற்கான பணம் ரூ 7 லட்சத்து 20 ஆயிரத்தை வங்கிகணக்கில் செலுத்தி விடுவதாகவும்கூறினார்.
இதை நம்பி சிவகுமார் 12 டன் சின்ன வெங்காயத்தைஒட்டன்சத்திரத்தில் இருந்துஅனுப்பி வைத்தார். ஜலாலுதீன் அதற்கான தொகை ரூ 1.50 லட்சம் மட்டும் செலுத்தினார். மீதிப் பணம் ரூ.5லட்சத்து 70 ஆயிரத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து சிவக்குமார் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் ஆகியோர் ஜெலாபுதீன் மீது மோசடி உள்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.