திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தில் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தி கூடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில்,சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தராஜ்(62) என்பவர் நெல் மூட்டைகளை அங்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது அவரிடம் கொள்முதல் நிலையத்தின் செயலாளர் ஜெகதீசன், விற்பனையாளர் ராஜேந்திரன் ஆகியோர் மூட்டை ஒன்றுக்கு ரூ.45 விதம் 2,790 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., திரு.மதியழகன், காவல் ஆய்வாளர்கள் திரு.அன்பழகன், திருமதி.மைதிலி ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் லஞ்சம் வாங்கிய ஜெகதீசன் ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.