கோவை : விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானங்க ளில் வரும் பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகிறார்களா என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் என்ற விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்போது சில பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
விமானத்தில் வந்த 20 பயணிகளை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு நகையை அணிந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இது பற்றி அதிகாரிகள் அந்த 20 பயணிகளிடம் விசாரித்தனர். அவர்கள், நாங்கள் எங்கள் தேவைக்காக வாங்கிய நகைகளை தான் அணிந்து வருகிறோம். கடத்தி வரவில்லை என்று கூறினார்கள். உடனே அதற்கான ஆவணங்களை காட்டுமாறு அதிகாரிகள் கேட்டனர். ஆனால் ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லைஉடனே அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 7½ கிலோ தங்க நகையை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4 கோடியே 11 லட்சம் ஆகும். இதனால் அந்த 20 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.