மதுரை : தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி
அவர்கள் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுத்துறை சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கினார். தமிழக முதலமைச்சர், கூட்டுறவு நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு 31.03.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுயஉதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் கடன் தொகை 2147 சுயஉதவிக் குழுக்கள் (19752 பயனாளிகள்) பெற்ற அசல் மற்றும் வட்டி உட்பட ரூ.384945528 (ரூபாய் முப்பத்தெட்டு கோடியே நாற்பத்து ஒன்பது இலட்சத்து நாற்பத்து ஐந்தாயிரத்து ஐந்நூற்று இருபத்து எட்டு மட்டும்) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திண்டியூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் மற்றும் புதிய நியாய விலைக்கடை ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், மதுரை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் உதவி ஆட்சியர்(பயிற்சி) திவ்யான்ஷு நிகம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி மகளிர் திட்ட இயக்குநர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி