தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வெங்கடேஷ், அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சுகாதேவி, தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.அரிக்கண்ணன், மற்றும் காவல்துறையினர், (01.08.2022) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் மணியாச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி கிழக்கு பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் விக்னேஸ்வரன் (24), என்பவர் தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி காவல்துறையினர், விக்னேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 30,000/- மதிப்புள்ள 20 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.