கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ளசோமனூரில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக கோவைமாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் போலீசாருடன் சென்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது அங்குதடை செய்யப்பட்ட 750 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்டபுகையிலை (குட்கா) பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளைபோலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சோமனூர் சர்ச் வீதியைச் சேர்ந்த மோதிலால் 40 சீத்தாராமன் (வயது 36 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.அந்த குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது.