திருச்சி: திருச்சி மாவட்ட காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
அதன்படி, இன்று 14.10.22-ந்தேதி இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் ஆகிய குட்கா போதை பொருட்களான வெளிமாவட்டத்தில் இருந்து லாரிகளில் கடத்தி வந்து, குமரவயலூரில் உள்ள தனியார் குடோனில் வைத்து பிக்அப் வாகனத்தில் ஏற்றி திருச்சி மாநகருக்குள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து,
காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், தெற்கு சரக காவல் துணை ஆணையர் அவர்கள் மற்றும் தனிப்படையினர் சம்பவ இடம் சென்று
பார்த்தபோது அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.2,50,000/– இலட்சம் மதிப்புள்ள சுமார் 300 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காகTN.38.AB.4656 லாரியில் இருந்து TN.49.BS.1490-bolero.pickup வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த 1)அப்பானந்தமூர்த்தி த.பெ.முத்துராமலிங்கம் (லாரி டிரைவர்) 2)பெரியசாமி த.பெ.முத்துசாமி (பிக்அப் டிரைவர்) 3)செல்லபாண்டி த.பெ.பாண்டி கிருஷ்ணமூர்த்தி த.பெ.முருகையன் ஆகியோர்களை சுற்றிவளைத்து கைது செய்தும்,
அவர்களிடமிருந்து சுமார் 300 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேற்கண்ட குற்றவாளிகளை கைது செய்த தெற்கு சரக காவல் துணை ஆணையர், கேகே.நகர் சரக காவல் உதவி ஆணையர் மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திருச்சி மாநகரத்தில், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்றவைகளால் இளைஞர்களின்
எதிர்கால வாழ்வை சீரழிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.