வேலூர்: வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேம் குமார் 22 என்பவர் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது Instagram பக்கத்தில் இருந்த “குறைந்த விலையில் ஆடைகள் விற்பனை” விளம்பரத்தை பார்த்து, அதை உண்மை என நம்பி முன்பணமாக ரூ.24800/- செலுத்தி ஆர்டர் கொடுத்துள்ளார்.
பணத்தை செலுத்திய பின்னர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது சம்பந்தமாக கடந்த வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் பேரில் துரித நடவடிக்கை எடுத்த போலீசார், அவர் இழந்த மொத்த ரூ.24800/- பணத்தை மீட்டு, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசார் கூறுகையில் சமூக வலைத்தளமான முகநூலில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கினா்.