கோவை : கோவை பெட்ரோல் பங்கில் ரூ 2.12 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வந்தவர் இளையராஜா இவர் பங்கில் வேலை பார்க்கும் போது 2 லட்சத்து 12 ஆயிரத்து 757 ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுதாகர் சாய்பாபா காலனி குற்ற பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் இளையராஜா மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்