கோவை : கோவையில் உள்ள சில மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் வீ கார்டு கம்பெனியின் பெயரில் போலி வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் கோவையில் உள்ள பல்வேறு எலக்ட்ரிக்கல் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பகவதி எலக்ட்ரிக்கல் என்ற கடையில் வீகார்டு கம்பெனியின் பெயரில் போலி வயர்களை விற்பனை செய்தது தெரிய வந்தது இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் அங்கு சோதனை நடத்திய போது ஏராளமான போலி வயர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு ரூ 14. 50 லட்சம் ஆகும் இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் அனுப்சிங் கைது செய்ய பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்