திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த சந்தோஷ் 36. என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தொழிற்சாலையில் உள்ள இரும்பு பொருட்களை சரி பார்த்தார். அப்போது அந்த தொழிற்சாலையில் இருந்த தாமிர கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. சந்தோஷ் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திரு.அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு மர்ம நபர்கள் யார் என விசாரித்து வருகிறார்கள்.