சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் திரு.மணிராம் சர்மா, 69 என்பவரது Radha Industries Private Limited (RIPL) நிறுவனத்திற்கு எதிரிகளின் SQB Steels Pvt.Ltd ., நிறுவனத்திலிருந்து குறைந்த விலையில் இரும்பு பொருட்களை விற்பனை செய்வதாக ஆசை வார்த்தை கூறியதின் பேரில், புகார்தாரர் குற்றவாளிகளின் மற்ற நிறுவனங்களான 1) RKKR Steels Pvt Ltd., 2) RKKR Holding Pvt Ltd., 3) Shantananda Steels Pvt Ltd , 4) Varun Exim Pvt Ltd., ஆகிய 4 நிறுவனங்களின் வங்கி கணக்கில் ரூ. 15,20,39,588 / -யை செலுத்தியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட எதிரிகள் இரும்பு பொருட்களை தராமலும், பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றி மோசடி செய்ததாக, கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றபிரிவு, ஆவண தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் குழுவினர் விசாரணை செய்ததில், குற்றவாளிகள் மீது ஏற்கனவே மற்றொரு வழக்கு நிலுவையில் இருந்து வருவது தெரிய வந்தது.
மேற்படி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு, ஆவண தடுப்பு பிரிவு காவல் குழுவினரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு எதிரிகளான 1) R. ரித்தேஷ்ராய்,39. ஈஞ்சம்பாக்கம் மற்றும் அவரது தந்தை 2) ராஜிவ் ராஷ் 66. என்பவர்களை காவல் ஆய்வாளர் திருமதி. G.G. பிரசித் தீபா தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் கைது செய்தனர். மேற்படி குற்றகுற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்