திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020/2021ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்
மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இத்தகைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்களின் உத்தரவின் பேரில்
மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 101 ஆன்ராய்டு வகை செல்போன்களை கடந்த ஒரு மாதத்தில் மீட்டனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை (மனுதார்கள்) இன்று (03.09.2021) மாவட்ட காவல் ,அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை
ஒப்படைத்தார்கள் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2020/2021-ம் ஆண்டில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி 101 செல்போன்களை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவும், மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் காவல் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சகாயம் செபஸ்திக்கண்ணு