ராமநாதபுரம்: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மும்முரமாக விற்பனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிற்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரது உத்தரவு படி கேணிக்கரை மகளிர் காவல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையில் போலீசார் அப் பகுதியில் நேற்று மதியம் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் வெளிபட்டணம் சிவன் கோயில் தெரு பத்மநாதன் (46) என்பவரது டீக்கடையில் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வந்தது தெரியவந்தது. பத்மநாதன் கடை மற்றும் அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்து தடை செய்யப்பட்ட 13,500 லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன பத்மநாதனை கைது செய்த போலீசார், லாட்டரி சீட்டுகள் டீலர் உச்சிப்புளி கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல் லட்சுமணன் ஆகியோரை தேடி வருகின்றனர். இவற்றின் மதிப்பு ரூ.10.80 லட்சம். லாட்டரி சீட்டு விற்பனை செய்த தொகை ரூ.80,500, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்