சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.மதுசூதன் ரெட்டி, நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டாஇ சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள்
புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 351 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை (நன்னடத்தைப்பிரிவு) சார்பில் சிறை மீண்டோர் உதவி சங்க நிதியில் மூலம் முன்னாள் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திடும் வகையில் சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு நிதியுதவியாக 3 நபர்களுக்கு ரூ.130000, பொது நிதியில் இருந்து வழங்கப்பட்டது. மேலும், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், இளையான்குடியை சேர்ந்த வாசுகி, தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்தார். மனுமீது உரிய விசாரனை மேற்கொள்ளப்பட்டு அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.5350 மதிப்பீட்டிலான தையல் இயந்திரம் உடனடியாக வழங்கப்பட்டது.
வருவாய்த்துறையின் சார்பில், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காரைக்குடி வட்டத்தை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும்
என, மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ135350 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் 12 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த
ப.மணிவண்ணன் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சு.தனலட்சுமி
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ந.மங்களநாதன்
மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சி.ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) திருமதி.ம.ரா.கண்ணகி, சிறை மீண்டோர் உதவி சங்கச் செயலாளர் பகீரதநாச்சியப்பன் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை (நன்னடத்தைப்பிரிவு) கீ.பிரியதர்சினி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி