கோவை : கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் செங்கோல் நாதன் ஆகியோர் காந்திபுரம் சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போதுஅங்கு சந்தேக ப்படும்படி ஒருவர்நின்று கொண்டிருந்தார் சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பெட்டிகளை போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் இருந்த 35 பெட்டிகளில் 8400 போதைமாத்திரைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மாத்திரைகள் ஆபரேஷன் நேரத்தில் வலி தெரியாமல் இருப்பதற்காக கொடுக்கக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் ஆகும். இந்த மாத்திரைகளை தண்ணீரில் கலக்கி சிரஞ்சி மூலம் போதை ஊசி ஆக மாற்றி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும்,விற்பனை செய்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ 1 லட்சம் இருக்கும். இதையொட்டி அதை வைத்து இருந்ததாக கணபதி சுபாஷ் நகரைச் சேர்ந்த தனசேகரன் ( வயது 28) கைது செய்யப்பட்டார். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.