கோவை : கோவை நவம்பர் 12 சார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை சுங்க அதிகாரிகளுக்கு நேற்று தகவல் வந்தது இதையடுத்து கோவைக்கு வந்த அந்த அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 பேர் தங்கத்தை பேஸ்ட் போல் உருக்கி இடுப்புப் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் 1.2 கிலோ எடை கொண்டதாகும் இதன் மதிப்பு ரூ 63 லட்சம் இருக்கும் இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல அதே விமானத்தில் பயணம் செய்த 5பயணிகளிடம் சோதனை செய்ததில் அவர்களிடம் ரூ 46 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் கடத்தல் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேரிடமும் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பொருட்களின் மொத்தமதிப்பு, ரூ 1கோடியே 8 லட்சம் இருக்கும். இவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்