தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரேயா குப்தா அவர்களின் மேற்பார்வையில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம், குளத்தூர் காவல் நிலைய முதல் காவலர் திரு. கொடிவேல், சூரங்குடி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய போலீசார் நேற்று 19.11.2022 சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர்களான அப்துல் அலி 52. கேப்ரியல் 34. மற்றும் அஜ்மீர் காஜா 38. ஆகிய 3 பேரும் சட்டவிராத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை காரில் கடத்தியது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளிகளான அப்துல் அலி, கேப்ரியல் மற்றும் அஜ்மீர் காஜா ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 90,000/- மதிப்பிலான 11,250 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.