திருச்சி: தீரன் படம் பாணியில் ஆந்திரா சென்று குற்றவாளியைக் கைது செய்த திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்..திருச்சி மாவட்டம், கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவரிடம், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெல்லம் ரவிசங்கர ரெட்டி என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு 27 லட்சம் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கிருஷ்ணகுமார் என்பவரும் ரவி சங்கரன் கேட்ட தொகையை செலுத்தியிருக்கிறார். சில நாட்கள் கழித்து எந்த தகவலும் தெரியாததாலும், ரவிசங்கரனை தொடர்பு கொள்ள முடியாததால் தன்னை ஏமாற்றி இருக்கிறார் என்று கிருஷ்ணகுமார் என்பவருக்கு தெரியவந்துள்ளது. அதன்பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு..சரவண #சுந்தர் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு..சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி , சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பால்வண்ணநாதன் அவர்களின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அன்புச்செல்வன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனி படையின் புலன் விசாரணையில் குற்றவாளி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் 04.02.2022 அன்று ஆந்திர மாநிலம் சென்று குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்