காஞ்சி; காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன்கள் காணாமல்போனது சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்களின் பார்வைக்கு வந்ததையடுத்து. செல்போன்களை விரைவில் கண்டுபிடிக்க காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.தன்ராஜ் கணேஷ் சைபர் கிரைம், உதவி ஆய்வாளர் திரு.சதீஷ், தலைமைக் காவலர்கள் திரு.அரவிந்தன், திரு.சக்கரவர்த்தி, திரு.ஜெகன்நாதன், திரு.ஆசைத்தம்பி மற்றும் காவலர் திரு.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 217 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார். சிறப்பாக விசாரணை செய்து செலபோன்களை மீட்ட தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்